கொடிவேரி அணையில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

571பார்த்தது
கொடிவேரி அணையில் குளிக்க தடை:
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சத்தியமங்கலம் , பவானிசாகர், கொடிவேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து, இவ்வணையின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த வெள்ளப் பெருக்கையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, இன்று (13ம் தேதி) இத்தடுப்பணையை மூடி, சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து, கொடிவேரி தடுப்பணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை, அணையின் முன்பு உள்ள பாலத்தின் மீது நின்று வேடிக்கைப் பார்த்து விட்டு செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி