நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்

62பார்த்தது
ஈரோடு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல். காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் ஈரோடு நகரில் உள்ளே வர போக்குவரத்துக் காவல் துறையினர் அனுமதி மறுத்து அதிரடி உத்தரவு.


ஈரோடு நகரில் இருந்து சேலம் நாமக்கல் கரூர் திருச்சி கோவை திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் சாலையில் காலை முதல் மாலை வரை வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோடு நகர் மையப் பகுதி வழியாக கனக வாகனங்கள் வந்து செல்வதால் ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக காலையில் வேலைக்கு வரும் பொது மக்களும் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் பொது மக்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து துறையின் கீழ் கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் நகரில் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாக நகர பகுதிக்குள் வந்தால் அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல் துறையின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி