ஆடிமாத பிறப்பை யொட்டி தேங்காய் சுட்டு வழிபாடு.

64பார்த்தது
ஆடிமாத பிறப்பை யொட்டி தேங்காய் சுட்டு வழிபாடு. பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் வழிபாடு என்பது கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய வழிபாடு ஆகும். இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஈரோட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் தேங்காய் சுட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக ஈரோடு திருவள்ளுவர் நகரில் பொதுமக்கள் ஒன்று திரண்டு தேங்காய் சுடும் வழிபாட்டில் ஈடுபட்டனர். இதற்காக தேங்காயின் கண் பகுதியில் துளையிட்டு உள்ளே இருக்கும் தண்ணீரை எடுத்து விட்டு அதனுள் அரிசி வெல்லம் கலந்த மாவினை அடைத்து தேங்காய் சுடுவதற்காக பிரத்தியேகமாக கடைகளில் விற்பனை செய்யப்படும் குச்சியில் தேங்காயினை இணைத்து ஊரில் நடுவில் உள்ள கோவில் முன்பாக நெருப்பு உண்டாக்கி அதில் தேங்காயை சுட்டு வழிபாடு செய்தனர். மேலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடும் செய்தனர். இதே போல் ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய வழிபாடான தேங்காய் சுடும் வழிபாட்டில் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி