ஈரோடு மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்

61பார்த்தது
ஈரோடு மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்

ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையராக, மணீஷ் சங்கர்ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோடு மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த சிவ கிருஷ்ணமூர்த்தி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அப்பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற பட்டியலில், ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இணை இயக்குநராக பணிபுரிந்து வந்த கூடுதல் ஆட்சியர் மணீஷ் சங்கர்ராவ், ஈரோடு மாநகராட்சி நியமிக்கப்பட்டார். ஆணையராக இதைத் ஈரோடு தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது கூறுகையில், அவர் 'ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம், ஏலம் விடப்படாத வணிக வளாகங்கள், பாதாள சாக்கடை திட்டம் போன்றவை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்' என்றார்.

தொடர்புடைய செய்தி