மதுரை மாவட்டம் பேரையூரில் ஆடி பிறக்கும் போதே மழையும் பெய்ததால் விவசாயிகள் ஆர்வமுடன் மக்காச்சோளம், பருத்தி, சோளம், கம்பு உளுந்து, பயிறு வகைகளை விதைத்தனர். ஆனால் மழை வேண்டிய நேரத்தில் வெயில் என காலநிலை மாறியதால் விவசாயம் பாதித்துள்ளது. போர்வெல் தண்ணீர் மூலம் சாகுபடி செய்த பயிர்கள் மட்டுமே ஓரளவு வளர்ந்துள்ளது. மானாவாரிப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.