பவானி - Bhavani

ஈரோடு வ. உ. சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

ஈரோடு வ. உ. சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

ஈரோடு வ. உ. சி பெரிய மார்க்கெட்டில் 700 - க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த வாரத்தை விட பல்வேறு காய்கறிகள் விலை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 60-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 30-க்கு விற்பனையானது. இதே போல் கலந்த வாரம் ஒரு கிலோ பாகற்காய் ரூ. 70 வரை விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 40-க்கு விற்பனையானது. கேரட் மற்றும் பீட்ரூட் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 80 -க்கு விற்பனையான நிலையில் ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனையானது. அதேசமயம் வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 60-க்கு விற்பனையான நிலையில் வரத்து குறைந்ததன் காரணமாக ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனையாகிறது. இதேபோல் கருப்பவரை ஒரு கிலோ ரூ. 150 க்கு விற்பனையானது. இதேபோல் பீம்சிங் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 150 -க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் ரூ. 40-க்கு விற்பனையான நிலையில் வரத்து குறைந்ததன் காரணமாக மீண்டும் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 க்கு விற்பனையானது.

வீடியோஸ்


ஈரோடு