அந்தியூர் - Anthiyur

ஈரோடு: கழிப்பறையில் இறந்து கிடந்த வட மாநில வாலிபர்

ஈரோடு: கழிப்பறையில் இறந்து கிடந்த வட மாநில வாலிபர்

புது டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில்  35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் கழிப்பறை  உள்ளே சென்வர் திரும்பி வரவில்லை. கதவு நீண்ட நேரம் திறக்கவில்லை. பயணிகள் கதவை தட்டினாலும் பதில் இல்லை. அப்போது அந்த ரெயில் சேலத்தைத் தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது  ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் நிலையில் இருந்தனர். பின்னர் அந்த ரயில் ஈரோடு இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.  அப்போது அந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా