ஈரோடு: கழிப்பறையில் இறந்து கிடந்த வட மாநில வாலிபர்

58பார்த்தது
ஈரோடு: கழிப்பறையில் இறந்து கிடந்த வட மாநில வாலிபர்
புது டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பி வந்து கொண்டிருந்தது. இதில் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனர். இந்த புதுப் பெட்டியில் உள்ள கழிப்பறையில் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உள்ளே சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. கதவு நீண்ட நேரம் திறக்கவில்லை. பயணிகள் கதவை தட்டினாலும் பதில் இல்லை. அப்போது அந்த ரெயில் சேலத்தைத் தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

இதனை அடுத்து இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் நிலையில் இருந்தனர். பின்னர் அந்த ரயில் ஈரோடு இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நம்பரை எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி