
கடலூர்: 4 கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள 136 டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 4 கோடியே 33 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.