வி. சாத்தப்பாடி: கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

59பார்த்தது
வி. சாத்தப்பாடி: கூழாங்கற்கள் கடத்தியவர் கைது
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே வி. சாத்தப்பாடி பகுதியில் கம்மாபுரம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில் வி. சாத்தப்பாடி அருகே வந்த ஒரு லாரியை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில் அந்த லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதை அடுத்து அந்த லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்து மேலும் இது தொடர்பாக லாரி டிரைவரான நடியப்பட்டு பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி