சின்ன வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து, பெருமளவு குறைந்ததே இதற்கு காரணம். கோயம்பேடு மொத்த சந்தையில் 4 நாட்களுக்கு முன்பு வரை கூட ரூ.70-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இன்று ரூ.130-க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.150 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.38ஆக குறைந்துள்ளது.