பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்க கோரி பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன் தாஸ் தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் வரும்போது மட்டும் பொங்கல் தொகுப்போடு பணம் கொடுக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 தொகை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.