புவனகிரி: பனை விதை நடும் விழா

85பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அழிச்சிக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பனை விதை நடும் விழா ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக வட்டார அலுவலர் ராஜசேகர், வட்டார ஒருங்கிணைப்பாளர் சதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அட்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி, துணைத் தலைவர் இளையராஜா, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி