தனது குட்டிகளை உணவாக உண்ணும் விலங்குகள் பற்றி தெரியும். ஆனால் பிறந்த உடனேயே தனது தாயை சாப்பிடும் விலங்கை பற்றி தெரியுமா? தனது தாயை உணவாக உண்ணும் விலங்காக தேள் இனங்கள் இருக்கிறது. ஒரு பெண் தேள் ஒரே நேரத்தில் பல குஞ்சுகளை பெற்றெடுக்கிறது. குஞ்சுகளை பாதுகாப்பதற்காக தனது தோளில் தாய் தேள் சுமந்து செல்கிறது. அப்போது அந்த குஞ்சுகள் தனது தாயின் சதையையே சாப்பிடுகின்றன. தாயின் உடல் குழியாகி அது இறக்கும் வரை குஞ்சுகள் அதை உண்கின்றன.