2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், திமுக தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. 234 திமுக சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.