தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 44 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (செப்.9) கோவை லாலி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பயிரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் முனைவர் திரிலோச்சன் மகாபத்ரா கலந்து கொண்டார்.