திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தால் ரூ.100, மலம் கழித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ள நிலையில் வடக்கு வள்ளியூர் மற்றும் திசையன் விளை பேரூராட்சிகளில் முதல்கட்டமாக இந்நடைமுறை அமலுக்கு வருகிறது என அப்பேரூராட்சிகளின் செயல் அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.