தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “ரத்தன் டாடா மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்த அவர் நெறிமுறைகள் மற்றும் பணிவின் உண்மையான சின்னமாகவும் திகழ்ந்தார். இந்த இழப்பு தனிப்பட்டதாக உணர்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்.” என பதிவிட்டுள்ளார்.