சரவணம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி மற்றும் செங்கத்துறை பகுதிகளில் இன்று (நவம்பர் 7) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அதன்படி சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி), லட்சுமி நகர், நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட். அதேபோல், செங்கத்துறை துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதே நேரத்தில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது: அதன்படி செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி. நகர் மற்றும் மதியழகன் நகர் ஆகிய குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.