எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதித்துவிட்டனர் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இடம் பெறாத காரணத்தால் இபிஎஸ் பாராட்டு விழாவிற்கு செல்லவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையன் கூறியுள்ளது சரியானது தான். அவரது கருத்தை நான் ஏற்கிறேன்" என ஆதரவு தெரிவித்துள்ளார்.