முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும், முறையான பட்டா இல்லாமல் அரசு நிலங்கள், ஆட்சேபனை இல்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து ஒப்புதல் அளிக்க முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.