மே.வ: சுந்தரவன புலிகள் காப்பகத்தில் வனக்காவலரை புலி ஒன்று தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. காட்டிற்கு வெளியே உலாவிய புலியை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்வதற்கான வனத்துறை ஊழியர்கள் புலியை துரத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த புலி, வனக்காவலர் ஒருவரை தாக்கியுள்ளது. உடனே மற்ற ஊழியர்கள் புலியை தாக்கியுள்ளனர். இதனால் புலி அந்த ஊழியரை தாக்குவதை விட்டுவிட்டு காட்டிற்குள் ஓடியது.