கோவையில் அத்திக் கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள செங்கோட்டையன், இந்த பாராட்டு விழாவில், எங்களை உருவாக்கிய MGR, ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. அதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என கூறியுள்ளார்.