அதிமுகவை பாஜக விழுங்க பார்க்கிறது - திருமா

53பார்த்தது
அதிமுகவை பாஜக விழுங்க பார்க்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திராவின் விமர்சனங்களால் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "அதிமுக பலவீனமடைந்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு சென்றுவிடும். ஆகையால், அதிமுக பலவீனம் அடையக்கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி