மும்பையில் நடந்த India's Got Talent நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா? இதில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்" என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ரன்வீருக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. இதையடுத்து, தனது பேச்சுக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.