திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் மீண்டுமொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி இருந்து ஈரோடு செல்லும் ஓகா ரயிலில், ஈரோட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு சதீஷ்குமார் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, உதவி எண் மூலம் இளம்பெண் புகார் அளித்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.