உத்தரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறு பிரச்சனைக்காக இரு தரப்பினரிடையே தகராறு எழுந்துள்ளது. அப்போது ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்று அமைந்துள்ளது. அருகில் இருந்த இளைஞரும் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.