நடப்பாண்டு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு, பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் அதில் திட்டத்தின் முக்கிய நோக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தாமதமானதால் நிதி ஒதுக்கீடு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.