சென்னை: திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்ன? அண்ணாமலை கேள்வி

58பார்த்தது
சென்னை: திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்ன?  அண்ணாமலை கேள்வி
திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? கடந்த 10 ஆண்டுகளாக பருவமழையின்போது சென்னை பாதிக்கப்பட்டநிலையில் சென்னையின் உள்ள திமுக எம்எல்ஏக்கள் என்ன செய்திருக்கிறார்கள்? 

மழை நாட்களில் மட்டும் நாடகமாடுவதை விட்டுவிட்டு, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா, இத்தனை ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டிவிட்டு ஒவ்வொரு முறையும் மழையின்மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா? அமைச்சர் பெரியக்கருப்பன் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இதற்கு அமைச்சர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி