உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு கிளம்பிய ஏராளமான பக்தர்கள், ரயில் பெட்டிகளில் இடம் கிடைக்காமல் ரயில் என்ஜின் பெட்டிக்குள் ஏறி அமர்ந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது. பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள் அவர்களை கீழே இறக்கி விட்டுள்ளனர்.