வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் உள்ள நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1954 - 55 ஆம் ஆண்டு 6ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 70 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று (பிப்.9) சந்தித்தனர். அதில் பேசிய விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், நான் பயின்ற பள்ளிக்கு ஏற்கனவே பல்வேறு பணிகள் செய்துள்ள நிலையில் மேலும் இந்த பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றுவேன். இந்த பள்ளியில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வேண்டும். கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் என கூறியுள்ளார்.