மணிப்பூரில் 6 பேர் கொடூரக் கொலை... உச்சக்கட்ட பதற்றம்
மணிப்பூர் மாநிலத்தின் மேற்கு பகுதியான ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேரை போராட்ட கும்பல் கடத்திச் சென்று கொலை செய்த நிலையில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், அங்குள்ள எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் இம்பால் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.