உ.பி: நேற்று (நவ.15) மாலை திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் உறவினர்களுடன் இன்று (நவ.16) அதிகாலை வேனில் தேசிய நெடுஞ்சாலை 74-ல் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேன் அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக எதிரே வந்த டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் 11 பேர் பயணித்த நிலையில், மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் உள்பட உறவினர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேன் டிரைவர் உயிரிழந்தார்.