மே.வ: ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் சுஷந்தா கோஷ் குடும்பத்தினருடன் அவருடைய வீட்டின் முன் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது, ஸ்கூட்டரில் வந்த 2 மர்ம நபர்களில் பின்னால் அமர்ந்திருந்தவன், கோஷை நோக்கி ஓடி சென்று கைத்துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளான். ஆனால், அவனுடைய கைத்துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. குண்டும் வெளிவரவில்லை. இதையடுத்து, தப்பியோடிய நபரை சுஷந்தா கோஷ் துரத்திப்பிடித்துக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.