விருதுநகர்: ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் வாக்குவாதம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி கம்புகளை பிடிங்கி அவர்களையே சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.