தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு: ஆர்எஸ் பாரதி

81பார்த்தது
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு: ஆர்எஸ் பாரதி
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு; பட்ஜெட்டிலும் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது என்று திமுக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசு, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து இருக்கிறது. இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, மும்முனைப் போராட்டம் போல திமுக நடத்தியது.

யுஜிசி வரைவு அறிக்கையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு திருத்தங்களை செய்துள்ளது. இதனை திமுக தலைவர் வன்மையாக கண்டித்து கடிதம் எழுதியதோடு நிற்காமல், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், கடந்த, பிப்ரவரி 6ம் தேதி, தலைநகர் டில்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

பியுஷ் கோயல் அறிக்கைக்கு பதில்:  ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் சில மாநிலங்கள் தாங்கள் செலுத்திய வரிக்கு ஏற்ப நிதி கேட்பது அற்ப சிந்தனை என சொல்லி இருக்கிறார். அவருக்கு தான் அற்ப சிந்தனை. எங்களிடம் இருந்து சுரண்டிக் கொண்டு செல்லும் நிலையில், நாங்கள் வாய் முடி சும்மா இருக்க வேண்டுமா? நாங்கள் செலுத்தும் வரியில், 50 சதவீதமாவது கொடுக்க வேண்டாமா? மக்கள் எங்களை கேள்வி கேட்க மாட்டார்களா? என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி