கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு சிறிய அறையின் வாடகை இணையவாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளது. அந்த அறையில் வசிக்கும் அபிஷேக் என்ற இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில் புறா கூண்டு போல மிக சிறியதாக இருக்கும் அந்த அறையின் வாடகை மாதம் ரூ. 25,000 என தெரிவித்துள்ளார். கை கால்களை கூட நீட்ட முடியாத அளவுக்கு மிக சிறியதாக இருக்கும் அறைக்கு இவ்வளவு வாடகை வசூலிப்பது தவறு என பலரும் தெரிவித்துள்ளனர்.