அண்ணா நகர் - Anna nagar

திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கிறது தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கிறது தமிழகம்: அண்ணாமலை

குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, உறுதியேற்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, உறுதியேற்போம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
Nov 01, 2024, 13:11 IST/தியாகராய நகர்
தியாகராய நகர்

விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம்: செல்வப்பெருந்தகை

Nov 01, 2024, 13:11 IST
தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டது. அதிகாரப்பகிர்வு குறித்த தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் ‌காமராஜர் கட்சி அமைய வேண்டும். அதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும் என அவர் கூறினார்.