திருச்சி: வரதட்சணை கொடுமை.. 7 பேர் மீது வழக்கு
திருச்சி காஜா நகரை சேர்ந்தவர் ஓசின் பாஸினா இவருக்கும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது பாரிஸ் நவுபில் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று வரதட்சணையாக 200 பவுன் நகை வழங்கப்பட்டதாக தெரிகிறது. கூடுதலாக பணம் நகை வாங்கி வருமாறு ஓசின் பாசினாவை கணவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீடான திருச்சிக்கு வந்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஓசின் பாசினா புகார் அளித்தார். புகாரின் பேரில் பாரிஸ் நவுபில் உள்பட அவரது உறவினர்கள் ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.