யார் அந்த சார்? பேட்ஜுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கடலூர் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களின், தங்களது சட்டைகளில், யார் அந்த சார்? என்ற பேட்ஜுடன் பங்கேற்றனர். இதனைப் பார்த்த மேயர், அதனை கழற்றுமாறு கேட்டுள்ளார். ஆனால், அதிமுகவினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேட்ஜை கழற்ற மறுத்த 5 அதிமுக மாமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாநகராட்சி மேயர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி