தேர்தல் களம் 2021 - Tamil Nadu Elections 2021

சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இந்தக்கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ மட்டுமல்லாது கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து நாளை ஆளுநருடன் சந்திக்கவுள்ளார். நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.