அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று (ஜன., 09) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 50,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டது. இதில், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கு உதவித் தொகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தபிஸ்வா சர்மா,
மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.