ஹாக்கி இந்தியா லீக் 6ஆவது சீசன் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று (ஜன.9) இரவு நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ், கோனாசிகா அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்த நிலையில் 2ஆவது பாதியில் கலிங்கா லான்சர்ஸ் அணி மேலும் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. இன்று (ஜன.10) நடைபெற உள்ள ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ்-தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.