ஷங்கர் இயக்கத்தில் ராம் சரன் நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இந்த படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் கசிந்துள்ளது. முழு HD பதிப்பில் டொரண்ட் வலைத்தளங்களில் 'கேம் சேஞ்சர்' கசிந்ததை அடுத்து திரைப்பட ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த படக்குழு, இந்த கசிவு பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது. 'கேம் சேஞ்சர்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.