“நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” - முதலமைச்சர் ஸ்டாலின்

80பார்த்தது
“நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜன.10) நடைபெற்று வருகிறது. இதில், எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்ய முடியாது. ரத்து செய்யும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கே உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் கட்டாயம் நீட் விலக்கு பெற்றிருப்போம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி