பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தில், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கூறியதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், "இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்று ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.