டாஸ்மாக் - Tasmac News

டாப் 10 வைரல் பதிவுகள் 🔥
டாஸ்மாக் |

சூடுபிடிக்கும் கள்ளச்சாரய விற்பனை - வீடியோ

அதிகாலை முதலே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதால் பெண்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் கனவாமேடு காட்டுப்பகுதியில் பாப்பாம்மாள் என்பவர் தினந்தோறும் கூலி ஆட்களை வைத்து கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அதிகாலை முதலே குடிமகன்கள் கள்ளச்சாராயத்தை வாங்க குவிந்து வருகின்றனர். வேலைக்கு செல்லாமல், காலை வேளையிலேயே போதையை தேடி அலையும் குடிமகன்களால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அரசு மதுபானக்கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் நிலையில், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை நோக்கி படையெடுக்கின்றனர். வடமாநிலங்களைப்போல தமிழகத்திலும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், தமிழக அரசு உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.