ஐ.பி.ல் 2021 - IPL 2021

தோனி மீண்டும் தந்தையாகிறார்; சாக்‌ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல்!

தோனி மீண்டும் தந்தையாகிறார்; சாக்‌ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ். தோனி மீண்டும் தந்தையாகிறார். தகவல்களின்படி, தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, சென்னை வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் மைதானத்திற்கு வந்து கொண்டாடி மகிழ்ந்தனர். தோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் ஐந்து வயது மகள் சிவா, தோனியை கட்டிப்பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. உடன் சுரேஷ் ரெய்னா அவரது மனைவி பிரியங்கா சௌதரி மற்றும் குழந்தைகளுடன் மைதானத்தில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். மைதானத்தில் இருந்த சாக்‌ஷி ஒரு மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தார். இது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற சந்தேகத்தை எழுப்பியது. இறுதியாக சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியானது. தோனி மற்றும் சாக்‌ஷியின் திருமணம் ஜூலை 2010-இல் நடந்தது. சிவா பிப்ரவரி 2015இல் இருவருக்கும் பிறந்தார். சிவா சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ஒரு குழந்தை நட்சத்திரமாவார்.