தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.10) பனையூரில் நடைபெற்று வருகிறது. இதில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு பாலா என்பவருக்கும் அஜித்தாவுக்கும் போட்டி என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர் தேர்வில் இருந்து அஜித்தா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிருப்தி நிர்வாகிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.