தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஜன.12) கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.